70 வயதில் சர்வதேசத்தை அதிசயிக்க வைத்த இலங்கை பெண்மணி!!

750

இலங்கையை சேர்ந்த வயதான பெண்மணியின் விடா முயற்சி காரணமாக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 70 வயதான ரோஹினி என்ற பெண்மணி, சர்வதேச பெட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கொழும்பை சேர்ந்த ரோஹினி பம்பலப்பிட்டி பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். அந்த காலப்பகுதியில் மிகுந்த விருப்பத்துடன் பெட்மின்டன் விளையாட்டில் ரோஹினி ஈடுபட்டுள்ளார். குடும்ப வாழ்க்கையின் ஊடாக கிடைத்த ஓய்வு நேரங்களில் ஒஸ்ட்ரஸ் என்ற விளையாட்டு கழகத்திற்கு சென்று பெட்மின்டன் விளையாட்டு பயிற்சிகளை பெற்றுள்ளார்.

அதற்கமைய நியூசிலாந்து நாட்டவருடன் பெட்மின்டன் போட்டியில் கலந்து கொண்டு அவரை தோற்கடித்த ரோஹினி, இலங்கைக்கு தங்கப் பதக்கம் ஒன்று பெற்றுக் கொடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற போட்டியில் அந்த நாட்டவரை தோற்கடித்து 70 வயதில் பதக்கம் வென்றமை குறித்து மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டியின் போது இந்திய பார்வையாளர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவுகளை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். 70 வயதில் சர்வதேச வெற்றியை பெறுவதென்பது பின்வாங்காமை மற்றும் விடா முயற்சியே காரணம் என ரோஹினி மேலும் தெரிவித்துள்ளார்.

70 வயதிலும் மிகுவும் துடுப்பான முறையில் விளையாடி தங்கப் பதக்கம் வென்ற ரோஹினிக்கு சர்வதேச ரீதியாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.