ஆறு அடி நீளமான முதலை ஒன்றை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைந்துள்ளனர். பலபிட்டிய மாது ஏரியில் இருந்த வந்த 6 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று முன்தினம் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பலங்கொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், முதலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் அம்பலங்கொட பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் அதிகாரி இது தொடர்பில் வனவிங்கு அதிகாரிகள் அலுவலகத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிலைச்சாலையில் இருந்து நேற்று காலை பாதுகாப்பான இடத்திற்கு முதலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.






