வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (08.10.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண ஓய்வூதியர் தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , ஓய்வூதிய திணைக்கள கணக்காளர் , மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் செல்வரட்ணம் , முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ரெனினோட் , வவுனியா மாவட்ட பிரதம கணக்காளர் பாலகுமார், வவுனியா மாவட்ட செயலக உதவி செயலாளர் கமலதாசன், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஓய்வூதியம் பெற்ற முதியோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் முதியோர்களின் பேச்சு போட்டி , பரிசளிப்பு நிகழ்வு , முதியோர் கௌரவிப்பு , விருந்தினர்கள் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

































