19 நாட்களாக பல்லி, அணில்களை சாப்பிட்டு உயிர் பிழைத்த வேட்டைக்காரர்!!

363

hunter

காட்டுக்குள் 19 நாட்களாக பல்லி மற்றும் அணில்களை சாப்பிட்டு வேட்டைக்காரர் உயிர் பிழைத்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர் ஜெனி பெனாப்ளோர். வேட்டைக்காரரான இவர் கடந்த மாதம் மென்டோசினோவில் உள்ள நேஷனல் வனப் பகுதிக்கு தனது நண்பருடன் வேட்டைக்கு சென்றார்.

இவர் மட்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு வேட்டையாட சென்றபோது கீழே தவறி விழுந்தார். எனவே தலையில் பலத்த அடிபட்டதால் நீண்டநேரம் மயக்கமடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் தனது நண்பரை பிரிந்தார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது இரவு வந்துவிட்டது. எனவே காட்டிலேயே தங்கிவிட்டார். வீடு திரும்ப முயன்றபோது வழி தவறி வேறு பாதையில் சென்றுவிட்டார்.

காட்டுக்குள் பல நாட்களாக சுற்றி திரிந்த அவர் அங்கிருந்த பாம்பு, பல்லி மற்றும் அணில்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தார். காட்டில் கிடைத்த பழங்களை தின்றும், ஆற்று நீரை குடித்தும் வந்தார்.

ஒருநாள் காட்டுப் பகதியில் ஹெலிகப்டர் பறப்பதை பார்த்தார். அவர்களிடம் உதவி கேட்க புகை மூலம் சிக்னல் கொடுத்தார். அதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே வனப்பகுதிக்குள் மாயமான அவரை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து 19 நாட்களுக்கு பிறகு அவரை மீட்டனர். அப்போது அவர் உடல்நலம் பாதித்த நிலையில் மிகவும் பரிதாபமாக இருந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.