வகுப்பறையில் ஆசிரியரை கண்மூடித்தனமாக கத்தியால் குத்திய மாணவன்!!

861

இந்தியாவில் ஆசிரியர் தலைமுடியை வெட்டச் சொன்னதால், அவரை மாணவர் வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் லோனிகண்ட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தனஞ்சய் அப்னவே(33) பேராசிரியராக உள்ளார். அதே கல்லூரியில் சுனில்(18) என்ற மாணவரும் படித்து வருகிறார்.

இதையடுத்து கடந்த வியாழக்கிழமை பேராசிரியர் தனஞ்சய் அப்னவே பாடம் நடத்தி கொண்டிருந்த போது, சுனில் தலையில் தொப்பி அணிந்தபடி இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சுனிலின் தலை முடியும் அதிகமாக வளர்ந்திருந்ததால் தனஞ்சய், மாணவனை அழைத்து, தலைமுடியை வெட்டும்படியும், வகுப்பறையில் தொப்பி அணியாமல் ஒழுக்கமாக இருக்கும்படியும் கூறி சத்தம் போட்டுள்ளார்.

சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதை தாங்கிக்கொள்ள முடியாமல், சுனில் ஆசிரியரை பழி வாங்க நினைத்துள்ளார்.

இதனால் கடந்த 7ஆம் திகதி வகுப்பறையில் தனஞ்சய் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, வகுப்பறைக்கு வந்த மாணவர் சுனில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார்.

இதனால் அவரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த ஆசிரியர் தர்ஷன் சவுத்ரி(30) தடுக்க வந்த போது, அவரையும் கண்மூடித்தனமாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்த இருவரும் உடனடியாக அங்கிருந்த மாணவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.