கமல்ஹாசனால் அரசியலில் ஜெயிக்க முடியாது : சொந்த வீட்டிலேயே எழுந்த கருத்து!!

829

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரால் வெற்றிபெற முடியாது என அவரின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நேரடியாக அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ள நிலையில், அடுத்த மாதம் 7 ஆம் திகதி தனது பிறந்தநாளன்று புதுக்கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமலுக்கு அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் இருந்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது. மூன்றாவதாக ஒரு கட்சி தொடங்கினால் எந்த பலனும் இருக்காது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் அவரால் வெற்றிபெற முடியாது. யாராக இருந்தாலும் சரி, நடிகன் என்ற தகுதிக்கு அப்பார்பட்டு அரசியலுக்கு வருவதற்கு வேறு ஒரு பக்குவமும் தேவை என கூறியுள்ளார்.