சிரியாவில் ஜனாதிபதி படைக்கும் போராளிகளிக்கும் இடையே நடந்துவரும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள புறநகர் பகுதிகள் பெரும்பாலும் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் தொடர்ந்து தீவிரமான குண்டு தாக்குதல் நடந்து வருவதால், மக்கள் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே பட்டினியால் வாடி வருகின்றனர்.
உணவு மருத்துவம் உள்ளிட்ட சர்வதேச உதவிகளூம் அப்பகுதிக்கு செல்லவில்லை.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் திருநாளை மக்கள் விருந்துண்டு கொண்டாவது வழக்கம். இந்நிலையில் அவர்கள் எங்கும் செல்லமுடியாத நிலையில் இருப்பதால் அங்கு பட்டினி கிடங்கும் மக்களுக்கு அப்பகுதி மசூதிகளின் மதத்தலைவர்கள் புதிய உத்தரவு ஒன்றை புறப்பித்துள்ளனர்.
பட்டினி கிடக்கும் மக்கள் பூனை, நாய், கழுதைகளை சாப்பிட்டு பட்டினியை போக்கிக்கொள்ளலாம் என்று மதத்தலைவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் தங்களை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று, இஸ்லாத்தில் சொல்லப்படாத மனிதர்களுக்கு பொருந்தாத விலங்குகளான பூனை, நாய், கழுதைகளை சாப்பிட்டு பசியை போக்கிக்கொள்ள சாப்பிட ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
பட்டினியால் துடித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது ஒரு உதவியாக இருக்கும். இந்த மோசமான நிலை தொடருமானால், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இறந்ததை தின்னும் நிலை உருவாகும் என்றும் மதகுருமார்கள் எச்சரித்துள்ளனர்.
சிரியா முழுவதும் நடைபெற்று வரும் இந்த சண்டை காரணமாக இதுபோன்று உத்தரவுகள் சிரியாவின் மற்ற பகுதிகளில் முன்பு மதகுருமார்கள் பிறப்பித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.





