கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உணவு விஷமானதால் ஏற்பட்ட உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று விசேட விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜாஎல – உதம்மிட்ட பிரதேசத்தை சேர்ந்த 54 பேர் கொண்ட உறவினர்கள் குழுவொன்று கஹடகஸ்கிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளனர்.
திருமண வீடு நோக்கி செல்லும் போது வீதியிலுள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு சென்று இரவு உணவு பெற்றுள்ளனர்.
அதன் பின்னர் ஏற்பட்ட வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.






