பல முறை மனு அளித்தும் பலன் இல்லை : உணவின்றி உயிரிழந்த ரிக்சா தொழிலாளி!!

913

இந்தியாவில் ரிக்‌ஷா தொழிலாளி ஒருவர் வறுமையின் காரணமாக உணவு கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட மாநிலத்தின் தன்பாத் பகுதியைச் சேர்ந்தவர் பட்நாத் தாஸ். வறுமையால் வாடி வந்த இவரது குடும்பம் அரசின் நலத்திட்டங்கள் பெற வேண்டி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்துள்ளது. ஆனால் அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பட்நாத் தாஸ்(40) உடல்நிலை கடுமையாக பாதிப்படைந்த நிலையில் மருத்துவ வசதி பெற முடியாமல் உயிரிழந்துள்ளார். சிம்தேகா மாவட்டத்தில் பசியால் 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தன்பாத் பகுதியில் ரிக்சா தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.