வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு : பொலிசார் தீவிர விசாரணை!!

562

 
வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (28.10.2017) காலை 11 மணியளவில் 250க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியிலுள்ள பூங்காவில் வேலை செய்ய சென்ற நபர் ஒருவர் நிலத்தினை பண்படுத்திய சமயத்தில் துப்பாக்கி ரவைகள் இருப்பதனை அவதானித்த பின் சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசார் 250க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ரவைகள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.