யாழில் ஒருவர் அடித்துக் கொலை!!

567

இளவாளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

50 வயதுடைய குறித்த நபருக்கு, இளவாளைப் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது. அதனை அறிந்த அப் பெண்ணின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் நேற்று (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.