பாடசாலை மாணவியின் கண்முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞன்!!

557

அவிசாவளை – கொஸ்கம பிரதேசத்தில் காதலி முன்னாலேயே இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  அந்தப் பகுதி யுவதி ஒருவருடன் 3 மாதங்களுக்கு முன்னர் குறித்த இளைஞர் காதல் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ள நிலையில், இளைஞரின் வீட்டார் தரப்பில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று இரவு யுவதியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் இளைஞர் அங்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியமையினால் கோபமடைந்த இளைஞன் யுவதியின் கைகளை ஜன்னலில் கட்டியுள்ளார்.

பின்னர் அவரின் முன்னால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் ஒரு தடவை தற்கொலைக்கு முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மாணவியின் தந்தை மற்றும் சகோதரன் குறித்த வீட்டிலேயே சில காலங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.