இலங்கையில் கடும் மழை பெய்யும் : பிபிசி விடுத்த முன்னறிவிப்பு!!

816

இலங்கை உள்ளிட்ட தமிழகத்தின் தென் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என பிபிசி வானிலை அவதான நிலையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

பிபிசி வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, “கடந்த 24 மணி நேர செயற்கைக்கோள் படத்தின் அடிப்படையில், அதிக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், இலங்கை மற்றும் தமிழகத்திலும் கடும் மழை பெய்யக்கூடும்” என அதில் கூறப்பட்டுள்ளது.