வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவான நபர் கைது!!

536

பல காலமாக தேடப்பட்டு 6 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த நபர் ஒருவர் நேற்று வவுனியா பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போதே அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் நீதிமன்றால் 6 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம், மட்டக்களப்பு நீதிமன்றம், கம்பளை நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களால் குறித்த நபருக்கு எதிராக 6 திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் இருந்து வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணாந்து ஆகியோரின் வழிகாட்டலில் பிராந்திய தீர்க்கப்படாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி கோரலேகெதர அவர்களின் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட் ஜேசுதாசன் (42521), பொலிஸ் கொன்தாபிள்காளான ஜீவாநந்தன் (45401), ரணதுங்க (59246), நிசாந்த ((59517), விஜேயசிங்க (46846), வீரசேன (78448), இந்திக்க (88610), அதுல (80891) ஆகியோர் அடங்கிய குழுவினரே குறித்த நபரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.