வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது : கஞ்சா பரிமாறும் இடமாக வவுனியா?

683

வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா நகரப்பகுதியில் சந்தேகத்திடமான நபர்களை சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் ஐந்து பேர் வேறு வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 1 கிலோ 910 கிராம் கேரளா கஞ்சாவுடன் புத்தளம் புகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து 2 கிலோ 70 கிராம் கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இருந்து மதவாச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து மதவாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 2 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து 2 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் கிளிநொச்சி இளைஞர் ஒருவர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு நபர் கிளிநொச்சியில் இருந்து மிஹிந்தலைக்கு கேரள கஞ்சாவினை கொண்டு சென்ற நிலையில் வவுனியா நகரப்பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். புல்மோட்டையைச் சேர்ந்த குறித்த நபரிடம் இருந்து 2 கசிலோ 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பட்டுள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழிகாட்டலில், எஸ்.ஐ.சுபசிங்க, பொலிஸ் சார்ஜன்களான சூரசேன (24778), அனுர (43210), பொலிஸ் கொன்ஸ்டபிள்களான பண்டார (14957), ஹேரத் (40117), பிரதீப் (45980), கொத்தலாவே (66412), கீர்த்தி (41672), குமார (66701) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரே குறித்த நபர்களை கைது செய்தனர்.

குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.