அவுஸ்திரேலிய மாணவியை பாலியல் ரீதியாக தாக்கிய இலங்கை மாணவரின் வழக்கு ஒத்திவைப்பு!!

595

Abuse-அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் தமிழ் மாணவர் ஒருவர் மீதான வழக்கு 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிக்சன் செல்வராஜா என்ற இந்த மாணவர் கடந்த பெப்ரவரி 21ம் திகதி கலூடன் வீதியில் அமைந்துள்ள, மேர்குரி பல்கலைக்கழகத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை அதிகாலை 3.30 அளவில் பாலியல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாணவியின் அறைக்கு அத்துமீறி சென்றமை மற்றும் அவரை நாகரீகமற்ற முறையில் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்களே இலங்கை மாணவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இலங்கை மாணவரின் தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் நீதிமன்றில் சமுகம் தரவில்லை. இதனையடுத்தே வழக்கு 2014ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.