மனைவி தாக்கியதால் குடிபோதையில் இருந்த கணவன் பலி!!

500

குடி போதையில் மனைவியை தாக்க முயற்சித்த நபர் ஒருவர், மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3.45 அளவில் நடந்துள்ளது.

வென்னப்புவ பாத்திமா மாவத்தை வசித்து வந்த 49 வயதான மாசேவ்வகே சுஜி சமிந்த துஷார என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் 48 வயதான மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தினமும் குடி போதையில் வரும் கணவன் தன்னை அடிப்பதாகவும் சம்பவம் நடந்த நேரத்தில் கணவன் தன்னை பொல்லால் தாக்க முயற்சித்ததாகவும் அப்போது அந்த பொல்லை பறித்து தான் கணவனை தாக்கியதாகவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

நீதவான் விசாரணைகள் நேற்று காலை நடைபெற்றுள்ளதோடு, சம்பவம் குறித்து வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.