வவுனியா விவசாயக்கல்லூரி மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவு தினம்!!

1008

 
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தினர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

இவர்களின் நினைவு தினம் வருடாவருடம் விவசாயக்கலிலூரியில் இடம்பெற்று வருவதுடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவைகளை விவசாயக்கல்லூரி மாணவர்கள் குறித்த நினைவு தினத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் 11ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (18.11.2017)​ இடம்பெற்றது
இந்நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர்களின் படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.