வவுனியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஓவியக் கண்காட்சியும் விற்பனையும்!!

38

Kids Creative Art Centre நடாத்திய இரண்டாவது ஓவிய கண்காட்சி கடந்த புதன்கிழமை (26.08.2026) காலை சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

எஸ்.கௌரிஷன் (Director- Kids Creative Art Centre Vavuniya) தலைமையில் முதன்மை விருந்தினராக வவுனியா மாநகரசபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபனும், பிரதம விருந்தினராக N.கமலதாசன் (Addl.District Secretary Vavuniya) அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக Eng. மைதிலி தயாபரன் (Director Northern province,Ceylon Electricity Board), Mr.S.நித்தியானந்தன் (District Cultural Officer Vavuniya & Mannar), Rev.Sr.துஷ்யந்தி செல்வநாயகம் (Sectional Head of Primary Section- Vavuniya Rambaikullam Girls M V),

Mrs.K.அபிராமி (Cultural officer Divisional Secretary Vavuniya), Mr.ஹரிபிரசாத் JP (City Coroner, Vavuniya General Hospital-President of OBA VTMMV), Mr.S.கௌரிசங்கர் (Attorney at Law/ Director of vavuniyans Vege Hotel), Mr.உ.கஜதீபன் (Managing Director of EVAHSAA), Mr.N.கபில்நாத் (சிரேஷ்ர ஊடகவியலாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் 1000ற்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன, மாணவர்களின் 250 Canvas ஓவியங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

கண்காட்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், 30 மாணவர்களுக்கு “Little Artist ” விருதும் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வினை கவிஞர் முல்லைதீபன்.வே தொகுத்து வழங்கினார்.

விருந்தினர் வரவேற்பினை “கலைத்தாய் நாடக மன்றத்தினரும்”, வரவேற்பு நடனத்தினை “ஏழிசை மிருதங்க நடனாலய” மாணவர்களும் வழங்கியிருந்தனர்.