ஓடஓட வெட்டிக் கொலைசெய்யப்பட்ட ரௌடி : அம்பலமான பின்னணிக் காரணம்!!

646

சென்னை மண்ணடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் என்பவருக்கு காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன.

2013ம் ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவத்திற்கான வழக்கு விசாரணைக்காக கடந்த வாரம் ஜோர்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பிணைக்காக விஜயகுமார் நேரில் ஆஜரானார்.

அப்போது விஜியை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று சராமாரியாக வெட்டிவிட்டு ஓடியது. உயிருக்கு போராடிய விஜி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகள் அப்துல் தமீம், வெங்கடேஷ், கணேஷ், முனுசாமி, மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கொலையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பில்லா சரவணன், அப்பு எடிசன் உள்ளிட்ட இரண்டு பேரையும் தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி கொலையாளிகள் பிரபல ரவுடி ஈசாவின் ஆட்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் பகுதியில் விஜி திடீரென மாமுல் வாங்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் விஜியின் ஆதிக்கம் அதிகரித்ததால் இனி விஜி இருந்தால் மாமுல் சரிவர வராது என்ற கோபத்தில் கொலை செய்தோம் என்று தெரிவித்துள்ளனர்.