வவுனியா மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்!!

1142

 
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பிரதேச செயலக பதிவுகளை நிராகரித்து இன்று (13.12.2017) காலை 10 மணியளவில் வவுனியா பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு வவுனியா பிரதேச செயலாளருக்கும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மகஜர் கையளித்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை தாங்கள் நிராகரிப்பதாகவும், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் ஆணைக்குழுக்கள் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வித விசாரணைகளும் முன்னேடுக்கப்படவில்லை. இவ் விடயத்தை கவனத்தில் கொண்டு பல வருடங்கள் தாமதமாகிக் கொண்டிருப்பதனால் இப் பதிவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்து,

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரனவிடமும் வவுனியா பிரதேச செயலகத்திற்கு சென்று வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசாவிடமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.