தனது கனவு திட்டத்திற்கு விடை கொடுக்கின்றது கூகுள்!!

650


கூகுள் நிறுவனம் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே.



இவற்றின் வரிசையில் Tango எனும் திட்டத்தினை 2014ம் ஆண்டில் ஆரம்பித்தது. இது கமெராக்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டமாகும்.

அதாவது அசைவு மற்றும் ஆழங்களை துல்லியமாக கணிக்கக்கூடிய கமராக்களை இத் திட்டத்தின் ஊடாக உருவாக்கி அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் முயற்சித்து வந்துள்ளது.



எனினும் இத் திட்டத்தினை 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



நவீன ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்களின் கண்கள் என அழைக்கப்பட்ட இக் கமராக்கள் முழுமையான வெற்றியினைப் பெறாமையினாலேயே முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது.