வவுனியா வெளிக்குளத்தில் ஒளவையாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

589

 
ஒளவையாரின் நினைவு தினம் வவுனியா வெளிக்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒளவையாரின் நினைவுச் சிலைக்கு அடியில் நேற்று (01.01.2018) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் மணி அகலங்கன், தமிழருவி சிவகுமார் , கோவிற்குளம் இந்துக் கல்லூரியின் அதிபர் பூபாலசிங்கம், நகர கிராம சேவையாளர் செல்வராஜா, உள்ளுர் விலைபொருள் உற்பத்தி சங்க தலைவர் செல்லத்துரை, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் பிரதீபன், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குள இளைஞர் கழக ஸ்தாபருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) , முன்னாள் இந்துக்கல்லூரியின் அதிபர் சிவஞானம், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன் உட்பட பொதுமக்கள் சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா நகரசபையால் நிர்மானிக்கப்பட்ட இவ்வுருவச்சிலையை 1898.03.28ம் திகதி அவ் ஆண்டில் வவுனியா நகரசபை தலைவராகவிருந்த ஜீ.ரி.லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர் காமினி பொன்சேகாவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.