நாடு முழுவதிலும் இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருவப்பெயர்ச்சி காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இடி மின்னல் தாக்குதல் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திறந்த வெளிகளில் சஞ்சரிப்பது, மின்சார மற்றும் உலோகப் பொருட்களை பயன்படுத்துவது போன்றன ஆபத்தானது என தெரிவித்துள்ளது.
மாலை வேளையில் நாட்டின் அநேக பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.
5000 அம்பியர் வலுவுடைய இடி மின்னல் தாக்குதல் மண் மீது விழும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





