இலங்கையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்..!

588

boyஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறுவன் ஒருவன் இலங்கையில் ஹொட்டல் ஒன்றில் வைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரஜை கொழும்பு கோட்டை பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

தமது 16 வயதான மகன் ஹொட்டலின் குளியலறையில் வைத்து துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஹொட்டல் பாதுகாப்பு ஊழியர் ஒருவர் சந்கேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.