கண்டியில் உணவு, நீர் வழங்காமல் சிறை வைக்கப்பட்டிருந்த 94 வயதான தாய் ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை யட்டியாவல பிரதேச வீட்டில் தாயை அடைத்து வைத்து மகள் கொடுமைப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாய் சிறுநீர் மற்றும் மலம் கழித்து பல மாதங்களாகியும் அவற்றினை சுத்தப்படுத்தாமையினால் அவரது உடல் முழுவதும் பூச்சி, புழுக்கள் காணப்பட்டுள்ளன.
இருட்டு அறையை பொலிஸ் அதிகாரிகள் திறந்து பார்க்கும் போது, மிகவும் கெஞ்சியவாறு அவர் உணவு கோரியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
3 ஆண் பிள்ளைகள் மற்றும் 3 பெண் பிள்ளைகள் இந்த தாயார் உள்ளதாகவும், ஒரு மகள் இவ்வாறு தாயை தடுத்து வைத்துள்ளதாகவும், ஏனையவர்கள் தாயை பார்க்க இந்த மகள் அனுமதிப்பதில்லை என பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
அந்த பகுதி மக்கள் தாயாருக்கு உணவு வழங்குவதற்கு முயற்சித்த போதிலும், அதற்கும் அந்த மகள் அனுமதிக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தனது தாயை பார்க்க விடாமல் அடைத்து வைத்திருப்பது தொடர்பில் மகன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைய இன்றைய தினம் அவ்விடத்தை சோதனையிட்டு தாயை மீட்டுள்ளனர்.






