அமெரிக்க கிரீன் காட் வீசாவுக்கு விண்­ணப்­பிக்கும் காலப்­ப­குதி நவம்பர் 2ம் திக­தி­யுடன் நிறைவு..!

371


usகிரீன் காட் குடி­யேற்ற வீசா­வுக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான காலம் நவம்பர் 2ம் திக­தி­யுடன் நிறை­வ­டை­கின்­றது. ஆர்­வ­முள்­ள­வர்கள் நவம்பர் 2ம் திகதி இரவு 9.30 மணி­வரை விண்­ணப்­பிக்­கலாம் என்று அமெ­ரிக்க தூத­ர­கத்தின் கொன்­சி­யூலர் பிரிவின் தலைமை அதி­காரி சல்லி ஸ்டேர்னல் தெரி­வித்தார்.

அமெ­ரிக்க நிலை­யத்தில் நேற்று பிற்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.



அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

பச்சை அட்டை (கிரீன் காட்) அதிஷ்டக் குலுக்கல் என்ற அழைக்­கப்­படும் இந்த வீசா­வுக்கு இணை­ய­தளம் மூலம் விண்­ணப்­பிப்­ப­தற்­கான காலம் கடந்த ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்­ப­மா­னது. நவம்பர் மாதம் இரண்டாம் திக­தி­யுடன் நிறை­வ­டை­கின்­றது.



இலங்கை மற்றும் மாலை­தீவு உள்­ளிட்ட சில நாடு­களில் பிறந்­தோ­ருக்கு இந்த அதிஷ்டக் குலுக்­கலின் ஊடாக வீசாவை பெறும் வகை­யி­லான நேர்­காணல் ஒன்­றுக்­கான சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­டு­கின்­றது.



அமெ­ரிக்­காவில் சட்­ட­பூர்­வ­மான நிரந்­தர குடி­மக்­க­ளாக கரு­தப்­ப­டு­வ­தற்­கான குடிவரவு வீசாக்­க­ளுக்கு தகைமை பெறு­வ­தற்­கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்­கின்­றது.


இது தொடர்­பான தக­வல்­களை அடை­வ­தற்கு ஆர்வம் கொண்­டுள்­ள­வர்கள் www.srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.என்ற இணையத்தளத்தில் பரிசீலிக்கலாம்.

மேலும் அதிஷ்டக் குலுக்களுக்கு விண்ணப்பிப்பதாயின் www.dvlottery என்ற இணையத்தளத்தை பார்வையிடவேண்டும்.


விண்ணப்பதாரி ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக் முடியும். ஒரு விண்ணப்பதாரி ஒரு முறையில் இரு தடவை விண்ணப்பித்தால் தகைமையை இழக்க நேரிடும்.

பல்வகைமை வீசாவுக்கு தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும் தொழில் அனுபவ தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இணையத்தளத்தில் விண்­ணப்­பித்த பின்னர் அதற்­கான உறு­தி­ப்ப­டுத்­தப்­பட்ட இலக்கம் வழங்­கப்­படும்.

வீசா நேர்­கா­ண­லுக்­காக தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளீர்­களா இல்­லையா என்­ப­தனை இந்த இலக்­கத்­தைக்­கொண்டே பரீ­சீ­லனை செய்­ய­வேண்டும்.


எனவே அந்த இலக்­கத்தை பாது­காத்து வைத்­துக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம்.

மேலும் இணையத்தளத்தில் விண்­ணப்­பிப்­பது முற்­றிலும் இல­வ­ச­மாகும். எது­வித மறை­முக செல­வு­களும் கிடை­யாது.

2014ம் ஆண்டு மே மாதத்தில் விண்­ணப்­ப­தா­ரிகள் www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தை பார்வையிட்டு வீசா நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக தெரிவு குறித்து அறிவிக்கப்படமாட்டாது. மாறாக விண்ணப்பதாரிகளே பரிசீலனை செய்ய வேண்டும்.

வருடாந்தம் 200 க்கும் 300 க்கும் இடைப்பட்டவர்கள் அமெரிக்காவுக்கு இந்த முறைமை ஊடாக செல்கின்றனர்.

சில நாடுகள் மட்டுமே இந்த முறைமைக்கு தகுதி பெற்றுள்ளன. தெரிவு செய்­யப்­ப­டு­கின்­ற­வர்கள் அமெ­ரிக்­காவில் வாழ்­வ­தற்கும் தொழில் செய்­வ­தற்கும் கல்வி கற்­ப­தற்கும் தகுதியை பெறுவார்கள்.

இதேவேளை இலங்கையிலிருந்து சட்டரீதியற்ற முறையில் அமெரிக்கா செல்லும் சம்பவங்கள் மிகவும் குறைவானதாகும். அவை தொடர்பான புள்ளிவிபரங்கள் என்னிடம் இல்லை. இலங்கையர்கள் வீசா நடைமுறையை பின்பற்றுகின்றவர்கள். என்றார் கொன்சியூலர்.