கிறிஸ்மஸ் பண்டிகையை குறி வைக்கும் நயன்தாரா..!

679

nayanநயன்தாரா நடித்த இரு படங்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை குறி வைத்து வெளியாகின்றன.

ஆரம்பம் படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா உதயநிதி ஸ்டாலினின் இது கதிர்வேலன் காதல் படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

ஹிந்தி கஹானி படத்தின் தமிழ், மற்றும் தெலுங்கு ‌ரீமேக்கான அனாமிகாவிலும் நயன்தாரா நடித்து வருகிறார். சேகர் கம்மூலா இயக்கிவரும் இந்தப் படத்தையும் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இது கதிர்வேலனின் காதல் வெளியீடு முன்னமே உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனாமிகா கிறிஸ்மஸுக்கு ஒரு வாரம் முன்பாக வெளிவரலாம் என்கிறார்கள்.