அனுஷ்காவுடன் நடிக்கும் கேத‌ரின் தெரேஸா..!

287

cathrineகார்த்தி அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கும் படம் காளி. ஞானவேல்ராஜா படத்தை தயா‌ரிக்கிறார். கார்த்தி ஜோடியாக கேத‌ரின் தெரேஸா நடிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் ருத்தரம்மாதேவி படத்தில் அனுஷ்காவுடன் கேத‌ரின் தெரேஸாவும் நடிப்பதாக ஆந்திரா செய்திகள் தெ‌ரிவிக்கின்றன.

ருத்ரம்மாதேவியை குணசேகர் தயா‌ரித்து இயக்குகிறார். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதை. இந்தப் படத்தில் ருத்ரம்மாதேவியாக அனுஷ்கா நடிக்கிறார். இதற்காக போடப்பட்ட அந்தப்புர அரங்கில் அனுஷ்காவின் முதலிரவு காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

அனுஷ்காவுடன் ராணா நடிக்கும் இந்தப் படத்தில் புதிதாக கேத‌ரின் தெரேஸா சேர்க்கப்பட்டுள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படம் 3டி-யில் தயாராகிறது.