மகேஷ் பாபுவுக்கு ஜோடியானார் தமன்னா..!

294

tamannaதமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் தற்போது அஜீத்துடன் ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் இந்த ஒரு படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது.

இந்நிலையில், தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.

இந்த படத்திற்கு ‘ஆகடு’ என பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தை மகேஷ் பாபுவை வைத்து ஏற்கெனவே ‘தூக்குடு’ என்ற படத்தை இயக்கிய சிரினு வைத்திலா இப்படத்தையும் இயக்குகிறார். பிற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.