அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சாந்தாரோசா என்ற நகரம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த சிறுவன் ஆண்டிலோ பாஸ் (வயது 12). இவன் தனது நண்பருடைய பொம்மை துப்பாக்கி ஒன்றை எடுத்து விளையாடி கொண்டிருந்தான்.
இதை பார்த்த சிலர் அவன் உண்மையான துப்பாக்கியை வைத்து மிரட்டுவதாக கருதி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை சுற்றி வளைத்து துப்பாக்கயை கீழே போடும்படி கூறினார்கள்.
ஆனால் அவன் துப்பாக்கியை கீழே போடவில்லை. எனவே பொலிசார் அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 7 முறை துப்பாகி சூடு நடத்தினார்கள். இதில் அந்த இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
துப்பாக்கி சூடு நடத்தியபோது அருகில் இருந்த 3 பேர் காயமடைந்தனர். அவன் வைத்திருந்தது உண்மை துப்பாக்கி என கருதி பொலிசார் அவனை சுட்டு கொன்று விட்டனர்.





