துருக்கியில் முதன் முறையாக இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள செக்ஸ் குறித்த விபரங்களை தெரிவிக்கும் இணையத்தளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹவுல்க் முரால் டெமிரேல்(வயது 38) என்ற நபர் புதிய ஒன்லைன் ஷாப்பை தொடங்கியுள்ளார்.
இதில் உடலுறவுக்கு தேவைப்படும் வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மேலும் இஸ்லாத்தில் எவ்வகையான உறவு முறைக்கு அனுமதி உள்ளது என்பது போன்ற ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
இந்த புதிய முறைக்கு துருக்கியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இணையதளத்தை ஒரே நாளில் 33ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,உடலுறவு பற்றி அறிந்து கொள்ளவும், அது பற்றி ஆலோசனை பெறவும் ஏராளமான இணையதளங்கள் உள்ளன.
ஆனால் பெரும்பாலான இணையதளங்களில் ஆபாச படங்கள் இடம் பெற்றுள்ளதால் பலரும் பார்க்க தயங்குகின்றனர்.
எனவே ஆபாச படங்கள் இடம் பெறாமல் தகவல்கள் தர வேண்டும் என திட்டமிட்டேன்.
அதிலும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் அனுமதிக்கப்படாத விஷயங்களை அனைத்து முஸ்லிம்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் எண்ணினேன்.
அதனால் www.bayan.helalsexshop.com என்ற இணையதளத்தை தொடங்கி ஆலோசனைகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தகவல்களை தரும் முறைக்கு Love Shop என பெயரிட வேண்டும் என அந்நாட்டு முக்கிய தலைவர்கள் பலரும் அறிவுறுத்தியுள்ளனர்.





