இங்கிலாந்தில் கோழிகளை பாதுகாப்பு புதிய கவச ஆடை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷெரி பகுதியில் ஏராளமான வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இவற்றை உலா விடும் போது சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.
இதை தடுக்க அங்குள்ள ஒரு நிறுவனம் கவச ஆடை(ஜாக்கெட்) ஒன்றை தயாரித்து அறிமுகம் செய்தது.
இதை கோழிகளின் மீது கட்டிவிட்டால் அதிலிருந்து வெளிப்படும் ஒளிச்சிதறல் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தெரியவரும். இதன் மூலம் கோழியின் உயிர் இழப்பு தவிர்க்கப்படுகிறது.
மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வெளிவரும் இந்த ஆடையின் விலை ரூ.1,200 ஆகும்.
இதுபற்றி கண்டுபிடிப்பாளர் ஜோன்ஸ் பவுல், இந்த பகுதி மக்களின் நீண்டநாள் கவலையை போக்க இதனை கண்டுபிடித்ததாகவும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.





