அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி புதிய சாதனை..!

283

baiஅவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் மூன்று போட்டியின் முடிவில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது, நான்காவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இத்தொடரில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லி இதுவரை 3 அரைசதம் உட்பட 318 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

இதற்கு முன்பு 2009ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரில் ரிக்கி பொண்டிங் 267 ஓட்டங்கள்(6 ஆட்டம்) எடுத்ததே இதுவரை சாதனையாக இருந்தது.

மேலும் இந்த தொடரில் அவுஸ்திரேலியா இதுவரை 38 சிக்சர்கள் விளாசியுள்ளது.

இருநாடுகள் இடையிலான ஒருநாள் தொடரில் அந்த அணி அடித்த அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான்.