பங்களாதேஷ் அணி 114 ஓட்டங்களால் முன்னிலையில்..!

398

bangalaநியுசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

தமது இரண்டாவது இனிங்சுக்காக வேண்டி துடுப்பெடுத்தாடி வரும் பங்களா​தேஷ் அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 269 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி சார்பில் மூமினுல் ஹக் 126 ஆ.மி, தமிம் இக்பால் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் படி இன்னும் ஒரு நாள் மீதமிருக்க பங்களாதேஷ் அணி 114 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கிறது. இன்னும் 7 விக்கட்டுகள் கைவசம் இருக்கிறது.