வைத்தியரின் கவனக்குறைவால் பெண்ணொருவர் மரணம்!!

518

வைத்தியரின் கவனக்குறைவால் தனது மனைவி உயிரிழந்துள்ளதாக கணவன் குற்றம் சாட்டியுள்ளார். பேராதனை – சகபோகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

42 வயதுடைய பெண் ஒருவர் கண்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் பேராதனை வைத்தியசாலை வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சையின் பின்னர் கடும் நோய்வாய்ப்பட்ட இந்த பெண் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வைத்தியரின் சத்திர சிகிச்சை காரணமாக பெண்ணின் உடற் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.