இலங்கையின் சாட்சி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

343

parlimentஇலங்கையின் சாட்சி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சட்டமூலத்துக்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இந்த சட்டமூலத்தின் படி இலங்கையில் குற்றவாளியின் உரிமைகளுக்கும் குற்றவியல் சட்டத்துக்கும் இடையில் சமநிலை பேணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

“குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகளை பாதுகாக்கும் மற்றும் உதவியளிக்கும் சட்டமூலம்” என்று இந்த சட்டமூலம் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கும் நீதி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட போதும் இன்னும் கிடப்பில் கிடப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குற்றம் சுமத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.