நியூமராலஜியால் கோச்சடையான் தலைப்பில் சிறிய மாற்றம்..!

291

kochadayanரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யாவால் தயாரித்து வெளியிடப்படவுள்ள ´கோச்சடையான்´ படத்தின் ஆங்கிலத் தலைப்பில் சமீபத்தில் ‘ஐ’ என்ற எழுத்து இரண்டு முறை போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் நியூமராலஜி என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு மாற்றம் செய்யுமாறு கூறிய சஞ்சய். பி.ஜுமானி நியூமராலஜியைத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக இவர் பாரத் நிர்மாண் விருதும் பெற்றுள்ளார்.

கடந்த சில வருடங்களாக ஹிந்திப் பட உலகில் பலருக்கும் இவரும், இவரது சகோதரி ஸ்வேதா ஜூமானியும் நியூமராலஜி ஆலோசனைகளைக் கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக எண்கணித நிபுணரான சஞ்சய், ’’சல்மான்கான் நடித்த ´தபாங்´ திரைப்பட தலைப்பில் அதிகப்படியாக ஒரு ஜி என்ற எழுத்தை சேர்த்தது அவரை மீண்டும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தியது. மற்றொரு நடிகரான அக்சய் கன்னா கடந்த சில வருடங்களாக எதிலும் சோபிக்கவில்லை.

அவருடைய 45ஆவது வயதில் அவருக்குப் புகழ் கூடும் என்று நாங்கள் கூறினோம். அதேபோல் சென்ற வருடம் அவரது நடிப்பில் மூன்று படங்கள் வெற்றியடைந்தன.

விரைவில் திரைக்கு வரும் சல்மானின் ´ஜெய் ஹோ´ படமும் எங்களின் கணிப்புப்படி தலைப்பு மாற்றப்பட்டது. ஷாருக்கானின் ´சென்னை எக்ஸ்பிரஸ்´ ஒரு நாள் பின்னதாக வெளியிடப்பட்டதும் தாங்கள் கணித்ததுதான்.

எங்களுக்கு விருது கிடைத்த 20ஆம் திகதி எங்களின் தந்தைக்கு ராசியான நாள். இந்த விருதினைத் எங்கள் தந்தைக்கு சமர்ப்பிக்கிறோம்.

திரைப்பட நட்சத்திரங்களுக்கு நியூமராலஜியில் நம்பிக்கை உள்ளது. எனினும், பலராலும் கடவுள் என்று கருதப்படும் ரஜினிகாந்த் எங்களின் ஆலோசனைப்படி நடந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது’’என்று கூறியுள்ளார்.