பாகிஸ்தானில் இந்தியப் பெண் ஒருவர் தாயுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தபோது மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிஹோர் நகருக்கு அருகேயுள்ள கிராமத்தில் 30 வயது இந்திய பெண் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
பிறகு தாய்-மகள் இருவரும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு ஆசாமி பின்தொடர்ந்தான். அவன் திடீரென்று இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சட்டையையும் கிழித்தான்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரின் பிடியில் இருந்து, இளம்பெண்ணை மீட்டார்கள். ஆனாலும் மிரட்டி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.
இதுபற்றி தாய் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.