50,000 ரூபாவுக்காக மனைவி, மாமனாரை சரமாரியாக குத்திக் கொன்ற நபர்..!

477

murderமும்பையில் 50,000 கடனுக்காக ஒரு நபர் அவரது மாமனார் மற்றும் மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை சந்திவெலியை சேர்ந்தவர் நிலேஷ். இவருக்கு வயது 29. தனது மனைவி சரஸ்வதியோடு வசித்துவந்த இவரிடம், மாமனார் மகாதேவ் 50,000 கடன் வாங்கியிருந்தார்.

சமீபத்தில் வேலையை இழந்த நிலேஷ் பொருளாதார சிக்கலில் மாட்டியதால் மாமனாரிடம் அவர் பெற்ற பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவரது மாமனார் நிலேஷை தாக்க முயன்றார். மாமனாரின் இந்த செயல் நிலேஷை கோபப்படுத்த, அருகில் இருந்த கத்தியை எடுத்து அவரை பல முறை குத்தினார்.



இதனை தடுக்க நடுவே வந்த மனைவியையும் வெறித்தனமாக தாக்கி கொன்ற நிலேஷ் இச்சம்பவம் தொடர்பாக அக்கட்டிடத்தின் செயலாளரிடம் தொலைபேசியில் சொன்னார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்ததை அடுத்து நிலேஷ் கைது செய்யபட்டார்.

வீட்டில் இருந்த சடலங்களை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.