இறுதிச் செலவுக்கு பணம் வைத்துவிட்டு உயிரைவிட்ட முதியவர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

796

 
தமிழ்நாட்டில் இறுதி செலவுக்கு பணத்தை வைத்து விட்டு ஆதரவற்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி சோதனை செய்தார்கள். அப்போது முதியவர் உடல் அருகில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், நான் ஒரு அனாதை, எனது சொந்த ஊர் பட்டுக்கோட்டை. எனது இடுப்பில் 300 ரூபாய் உள்ளது அதை வைத்து என் சடலத்தை புதைத்து விடுங்கள் என முதியவர் எழுதியிருந்தார்.

இதையடுத்து முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு பொலிசார் எடுத்து சென்றனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.