6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த 14 வயதுச் சிறுவன்!!

793

 
தமிழகத்தில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் எரித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் எரிந்த நிலையில் சிவகாமி என்னும் 6 வயது பள்ளி சிறுமியின் பிரேதம் கிடைத்துள்ளது.

சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் சிறுமி சிவகாமி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியை சேர்ந்த 14 வயது சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அத்துமீறி நடந்ததால் சிறுமி கத்தியுள்ளார், உடனடியாக பயந்து வெளியே ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்த சிறுவன் சிறுமியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளான். ஒன்றும் தெரியாதது போல் தனது வீட்டுக்கு சென்று, மண்ணெண்ணெய் எடுத்து வந்து சிறுமியை எரித்துள்ளான்.

வீட்டைப் பூட்டிவிட்டு, சிவகாமி படிக்கும் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் வீடு தீப்பிடித்து எரிவதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்ததில் சிறுமி சடலமாக கிடப்பது தெரியவந்தது.

பொலிசார் விசாரணை நடத்தி தீ விபத்தில் சிறுமி இறந்துவிட்டதாக முதலில் வழக்குபதிவு செய்தனர்.

இதன்பின்னர் 6 வயது சிறுவன் நடந்த விபரங்களை கூற, 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.