டெல்லியில் காதலியின் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர் கொல்லப்படுவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் நண்பர்களிடம் போனில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அங்கிட் (23) என்ற இளைஞரும், நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நிஷாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி நிஷா தனது தாய் மற்றும் சகோதரரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அங்கிட் தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளார் என கருதிய அவரின் தந்தை அங்கிட்டை கொம்பால் அடித்துள்ளார்.
இதையடுத்து தனது நண்பர்களுக்கு போன் செய்த அங்கிட் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும், நிஷா எங்கிருக்கிறார் என பார்க்கும்படியும் கூறியுள்ளார். இது நடந்து 7 நிமிடங்கள் கழித்து அங்கிட்டை நிஷாவின் தந்தை கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
அங்கிட் கடைசியாக போனில் பேசிய காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக நிஷாவின் தந்தை, தாய் மற்றும் மாமாவை பொலிசார் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், அங்கிட்டின் மரணத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
#WATCH CCTV footage of Ankit, who was stabbed to death in Delhi’s Khyala on February 1; Three accused, including a juvenile, have been sent to judicial custody in connection with the incident pic.twitter.com/9E3IsvzH50
— ANI (@ANI) February 5, 2018






