தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க தம்பதியினர், தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த 25 பேர் கொண்ட குழுவினர் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ளனர். இந்தியாவின் அனைத்து முக்கிய மாநிலங்களையும் சுற்றிப் பார்த்த அவர்கள் தமிழகத்திற்கும் சென்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் சிற்பங்களை ரசித்து வந்துள்ளனர்.
அப்போது அந்த குழுவில் இடம் பெற்றிருந்த சோ- சிண்டி தம்பதியினர், தமிழர் பண்பாட்டின் மீதான அதீத ஈடுபாட்டினால் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளனர்.
இது குறித்து அவர்களின் குடும்பத்தாரிடம் சோ தெரிவித்த நிலையில் தஞ்சை தளவாய் பாளையத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தம்பதியர் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி- பட்டுப்புடவை அணிந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளனர்.
அதன்பின் மஞ்சள் தாலி கட்டி இருவரும் மாலை மாற்றிக்கொண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு தம்பதிகள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட அந்த நிகழ்வை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.







