ஹன்சிகாவின் அதிரடி கிளாமர்: தாக்குப்பிடிப்பார்களா தெலுங்கு தேச நாயகிகள்?

249

hansikaசிம்­புவை காத­லிப்­ப­தாக வெளிப்­ப­டை­யாக அறி­வித்த பின், ஹன்­சி­வின் மார்க்கெட் சரிந்துவிடும் என்­றுதான் எதிர்­பார்க்­கப்­­­பட்­டது.

ஆனால், ‘இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்­துதான், திரு­மணம் செய்து கொள்வேன்’ என்று தயா­ரிப்­பா­ளர்­க­ளிடம், ஹன்­சிகா உறு­தி­ய­ளித்­ததைத் தொடர்ந்து மீண்டும் அவ­ரது கால்ஷீட் டைரி, தொடர்ந்து ‘புல்’­லா­கவே உள்­ளது.

அதிலும், ‘தீயா வேலை செய்­யணும் குமாரு, சிங்கம் –2’ படங்­களின் வெற்றி, ஹன்­சிகா வட்­டா­ரத்தை மேலும் பரபரப்பாக்கி விட்­டுள்­ளது.

‘வாலு, வேட்­டை­மன்னன், அரண்­மனை’ உட்­பட பல படங்­களில், தீயாக வேலை செய்து கொண்­டி­ருக்­கிறார். இந்­நி­லையில், மீண்டும் தெலுங்கு படங்­க­ளிலும் ஆர்வம் காட்டத் தொடங்­கி­யுள்ள ஹன்­சிகா, ரவி­தேஜா நடிக்­க­­­வுள்ள பட­மொன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அதோடு, கிளா­ம­ராக நடிக்­கவும் டபுள் ஓ.கே., சொல்­லி­யி­ருக்­கி­றாராம். இதனால், ஹன்­சி­காவின் ரீ– என்ட்ரி அதி­ர­டி­யாக இருக்கும் என்று, அதை தாக்­கு­பி­டிக்க, தாங்­களும் தயா­ராகி வரு­கி­றார்­களாம் தெலுங்கு தேச நடி­கைகள்.