அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்தால் ஆன கழிவறை பேப்பரை தயாரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் மேன் கழிவறை பேப்பரை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் 22காரட் தங்கத்தை வைத்து பேப்பரை தயாரிக்க திட்டமிட்டது,இதன்படி பேப்பர் ரோலை தயாரித்துள்ளது.
இதன் விலை ரூ.8.4கோடி ஆகும், தங்கத்தால் ஆனாலும் இதனை இலகுவாக பயன்படுத்தலாம் என்றும் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளது.
துபாயில் தங்கத்தால் ஆன கழிவறை சீட்டுகள் தயாரிக்கப்பட்டதை பார்த்து தான் இதனை தயாரித்துள்ளதாம்.
எனினும் இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.