கட்டாக்கில் பலத்த மழை – 5–வது ஒரு நாள் போட்டி நடக்குமா?

319

indausஜார்ஜ் பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது.

இதன்போது நடைபெற்ற ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

7 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 3–வது போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2–வது போட்டியில் இந்திய அணி வென்றது. 4–வது போட்டி மழையால் பாதியில் இரத்து செய்யப்பட்டது. இதன்படி ஆஸி. 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தநிலையில், 5–வது ஒரு நாள் போட்டி ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஒரிசாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கட்டாக் பகுதியிலும் மழை கொட்டியது. இதனால் கிரிக்கெட் மைதானத்தில் அதிக அளவில் மழை நீர் தேங்கி உள்ளது.

மேலும் அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நாளைய போட்டியும் மழையால் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் 5–வது ஒரு நாள் போட்டி நடப்பது சந்தேகமாக இருக்கிறது.

ஒரு வேளை நாளை மழை ஓய்ந்து 5–வது போட்டி நடந்தால் அதில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அவுஸ்திரேலியா வென்றால் 3–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விடும்.

அப்படி நடந்தால் இருந்தியாவுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். இதனால் நாளைய ஆட்டத்தில் வென்று 2–2 என்ற கணக்கில் சமநிலை படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.