சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள சுக் வாடி பராடா நகரில் நேற்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மசூதி வழியாக சென்ற 40 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரியா ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் உள்ள ஒசாமா பின் சைத் மசூதி வாசலில் நேற்று பிற்பகல் வேளையில் ஒரு காரில் தீவிரவாதிகள் வெடிப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதாகவும் சிலர் கூறினர். இந்த தாக்குதலுக்கு அரசின் ஆதரவு பெற்ற உளவுப்படையினரே காரணம் என்று ஆசாத்தின் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த தாக்குதலில்7 குழந்தைகள் உள்பட40 பேர் பலியாகினார். 20க்கும் மேற்பட்டவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.