விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் – உதயிநிதி ஸ்டாலினின் ஆச்ச‌‌ர்யம்..!

313

v2விஸ்வரூபம் மாதி‌ரி சொந்தமாக வெளியிட்டு ‌ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று கமல் யோசித்திருப்பார் போலிருக்கிறது. யாரும் பார்க்காத விஸ்வரூபம் 2 ட்ரெய்லரை ரெட் ஜெயண்ட் முதலாளி உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் பிரத்யேகமாக காண்பிக்க வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

எஸ், முதலாளி விஸ்வரூபம் 2ட்ரெய்லரைப் பார்த்து சமூக வலைதளத்தில், ஜஸ்ட் அமேஸிங், ஒன்லி உலகநாயகன் கமல் சார் கேன் டூ திஸ் என்று புல்ல‌ரித்திருக்கிறார்.

விஸ்வரூபம் படத்தில் நீங்களும் நாமும் பார்த்த ஆப்கானிஸ்தான் காட்சிகள் அனைத்தும் அடையாறு சத்யா ஸ்டுடியோ மைதானத்தில் எடுக்கப்பட்டவை.

படத்தின் ஸீ‌ஜி டிபார்ட்மெண்ட் ஹெட் மது பெ‌ரிய குண்டாக தூக்கிப் போட்டிருக்கிறார். என்ன? ஆப்கானிஸ்தான் மட்டுமில்லை. அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அங்கே எடுக்கப்பட்டவை இல்லையாம். எல்லாமே உள்ளூ‌ரில் எடுக்கப்பட்டவைதானாம். என்ன தலைசுற்றுகிறதா?

எல்லாமே ஸீ‌ஜி வேலைகள். கமலின் மாஸ்டர் மைண்ட் அதில்தான் இருக்கிறது. இன்னொரு சின்ன உதாரணம். தசாவதாரம் படத்தில் முகுந்தா முகுந்தா பாடலில் வரும் கிழவி கமலை தனியாகவும், மற்றவர்களை தனியாகவும் ஷூட் செய்து பிறகு இரண்டையும் ஒன்றாக மேட்ச் செய்திருக்கிறார்கள். அதேபோல் அந்தப் படத்தில் வரும் ‌ஜீப் சேஸிங் காட்சிகள் அனைத்தும் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டவை.

கமலா கொக்கா…?