இலங்கைக்கு சந்தன மரக்கட்டை கடத்த முயன்ற நபர் கைது..!

603

arrestஇந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி சந்தன மரக்கட்டை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தன மரக்கட்டை தொகுதி ஒன்றுடன் இந்திய பிரஜை ஒருவர் திருவானந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 45 கிலோ கிராம் சந்தன மரக் கட்டைகள் அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நபர் சந்தன மரக் கட்டைகளை இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி எடுத்து வர தயாரானதாக அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த வியாபாரத்தை கடந்த காலங்களாக தொடர்ந்து செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.